கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது இதையெல்லாம் செய்யவேக்கூடாது.?
Don't some activities temple to return home
முன்பெல்லாம் கோயிலில் இருக்கும் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு சென்று கடவுளை வழிபட்டனர். அதன் அர்த்தம் என்னவென்றால் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்.
அதன்படி நமது உடலில் தீய சக்திகள் நிறைந்திருக்கும். அதாவது பாக்டீரியா, வைரஸ் போன்றவை நிறைந்திருக்கும். எனவே இதனை நீக்கி நேர்மறை எண்ணங்களை நமது உடலில் கொண்டுவர வெளிப்புறத்தில் இருக்கும் தீய சக்திகளை நாம் வெளியேற்ற வேண்டும்.
அதன் காரணமாகத்தான் கோயிலுக்கு செல்வதற்கு முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என கூறுகின்றனர். மேலும் குளித்துவிட்டு செல்வதால் நமது உடல் குளிர்ச்சி அடைந்து அமைதியான மனநிலை கிடைக்கும்.
அந்த நேரத்தில் கோயிலுக்கு செல்லும்போது கோயிலில் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் நமது உடல் முழுவதும் கிரகித்துக் கொள்ளும். ஆனால் தற்போது தலையில் தண்ணீர் தெளித்துவிட்டும், காலை கழுவிக் கொண்டும் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
கோயிலுக்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என கூறுவார்கள். வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் பெரியவர்கள் கூறுவார்கள். அதற்குக் காரணம் நாம் கோயிலில் பெற்ற நேர்மறையான எண்ணங்களை அனைத்தும் நமது வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதனால் தான் கோயிலுக்கு சென்று விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என கூறுகின்றனர்.
அதேபோல் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் காலை கழுவ கூடாது என கூறுவார்கள் அதற்கு காரணமும் கோயிலில் கால் வைத்து அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நல்ல நேர்மறையான எண்ணங்களை வீட்டுக்கு எடுத்து வர வேண்டும் எனவே காலை கழுவ கூடாது என்பார்கள்.
கோயிலுக்கு செல்லும்போது தலைவாசல் வழியாக செல்ல வேண்டும். ஏனென்றால் கர்ப்ப கிரகத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு நேராக தான் இருக்கும். அதன் காரணமாக அந்த நல்ல கதிர்வீச்சு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கோயிலின் தலைவாசல் வழியாகவே நுழைந்து செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.
அதேபோல் கோயிலில் இருந்து வெளிவரும் போது சாமிக்கு நேராக புற முதுகு காட்டி நாம் வெளியே வரக்கூடாது இடது பக்கம் அல்லது வலது பக்கம் மற்றொரு வாசல் வழியாக வரவேண்டும்.
மேலும் கடவுளுக்கு சாத்தப்பட்ட மாலையை பக்தர்கள் கழுத்தில் அணியக் கூடாது. தலைவணங்கி கையில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் பூவை வீட்டு பூஜை அறையில் உள்ள மற்றொரு கடவுளுக்கு சாத்தக்கூடாது.
அதேபோல், கோயிலுக்கு செல்லும்போது தர்மம் செய்யலாம். ஆனால் வெளியே வரும்போது தர்மம் செய்யக்கூடாது. அதேபோல் சிவன் கோவிலில் அமர்ந்து விட்டு வரலாம். ஆனால் பெருமாள் கோயிலில் அமரக்கூடாது என சொல்லப்படுகிறது.
English Summary
Don't some activities temple to return home