தாய்லாந்த் காவல்படை பாராசூட் பயிற்சியின் போது விபத்து... விமானம் நொறுங்கியதில் 6 பேர் பலி...!
Thai police plane crashes during parachute training killing 6
தாய்லாந்து நாட்டின் பெட்ஷப்ரி மாகாணம் சம்-அம் மாவட்டம் ஹு-ஹன் விமான நிலையத்திலிருந்து நேற்று, காவல் விமானப்படை பிரிவுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் புறப்பட்டது.

இதில், பாராசூட் பயிற்சிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில், விமானி மற்றும் போலிஸ் சிறப்புப்படை அதிகாரிகள் உள்பட 6 பேர் பயணித்தனர்.
மேலும், பாராசூட் பயிற்சிக்கு விமானம் பெட்ஷப்ரி மாகாணத்திலுள்ள கடற்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணித்த 6 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.பிறகு இவ்விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்த 6 பேரின் உடலையும் கடலில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thai police plane crashes during parachute training killing 6