பார்வையற்றவர்களுக்காக தொண்டு நிறுவனம் - பள்ளி மாணவி சாதனை.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பார்வை குறைபாடுடையய அந்த சிறுமி கரும்பலகையில் எழுதப்பட்டு இருந்த வாசகங்களை படிக்க மிகவும் சிரமப்பட்டார்.

இதையறிந்த நொய்டாவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சஞ்சனா தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்வை குறைபாடு எவ்வளவு கொடூரமானது? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இது குறித்து மாணவி சஞ்சனா தெரிவித்துள்ளதாவது:- "பார்வை குறைபாடு பிரச்சனையால் லட்சக்கணக்கான மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பாதையை ஒளிரச் செய்ய நான் விரும்புகிறேன். அதற்காக சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் சிகிச்சைக்கு உதவி செய்யவும் இந்த தொண்டு நிறுவன முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

எங்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை பிரோசாபாத்தில் இருந்தே தொடங்குகிறோம். அதற்கு காரணம் பிரோசாபாத்தில் பலர் கண்ணாடி வளையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக வெப்பம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை உரிய சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.

அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆகவே பாதிக்கப்பட்டவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, இருளில் இருக்கும் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது எங்கள் லட்சியம்" என்றுத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

schoool student eye care awarness in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->