திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து - அதிர்ச்சியில் பக்தர்கள்.!
free ticket cancelled in tirupati temple
ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா உள்ளிட்ட நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது.
இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததனால் திருப்பதியில் நாளை காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படும். எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
free ticket cancelled in tirupati temple