வருகிறது குரு பெயர்ச்சி 2021-2022.. குருவின் பார்வை பெறும் ராசிகள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?
guru peyarchi 2021 to 2022
வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவகிரக வரிசையில் முக்கியமானவர். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலானவற்றை அடையலாம்.
'குரு" என்றால், 'இருளை நீக்குபவர்" என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர்.
ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றது.
குரு பெயர்ச்சி என்றால் என்ன?
பெயர்ச்சி என்பது இடம் விட்டு இடம் மாறுவது என்று பொருளாகும். நவகிரகங்களில் தேவர்களின் குருவாக இருக்கக்கூடியவர் பிரகஸ்பதி ஆவார். அவரே பின்னாளில் 'குரு" என்று அழைக்கப்படுகின்றார்.
நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகமும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய இந்த பூமியில் தோன்றக்கூடிய அனைத்து உயிரினங்களிலும் வாழ்நாட்களில் ஏற்படக்கூடிய இன்ப, துன்ப செயல்பாடுகளில் காரண கர்த்தாவாக இருக்கின்றன.
நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு விதமான ஆதிபத்தியங்களை ஏற்று அவரவர்களின் வாழ்நாளில் அந்த ஆதிபத்தியங்களின் மூலமாக அவரவர்கள் சேமித்து வைத்திருக்கக்கூடிய கர்மவினைகளின் பலன்களை அளிக்கின்றன.
2021ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி எப்பொழுது?
நவகிரகத்தில் சுபர்களில் ஒருவரான தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் பெயர்ச்சி என்பது அனைவருடைய வாழ்நாளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
அந்தவகையில் இந்த வருடம் தேவர்களின் குருவாக இருக்கக்கூடிய சுபரான பிரகஸ்பதி இதுவரை மகர ராசியில் இருந்தார். இனி வரப்போகின்ற காலத்தில் ஒரு வருட அளவிற்கு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 27ஆம் தேதி நவம்பர் 13ஆம் தேதி அன்று குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி அன்று குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவின் பார்வை பெறும் ராசிகள் எவை?
தேவர்களின் குருவான பிரகஸ்பதி தான் நின்ற ராசியிலிருந்து ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் பார்வையின் மூலமாக மூன்று ராசிகளை வருடம் முழுவதும் பார்வையிட போகின்றார்.
குருவின் ஐந்தாம் பார்வை பெறும் ராசி மிதுன ராசி
குருவின் ஏழாம் பார்வை பெறும் ராசி சிம்ம ராசி
குருவின் ஒன்பதாம் பார்வை பெறும் ராசி துலாம் ராசி
குருவின் சஞ்சாரத்தால் ஏற்படப்போகும் மாற்றங்கள் :
குருவானவர் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலக்கட்டங்களில்...
நல்ல மழை பொழியும்.
அரசு தொடர்பான முடிவுகளில் சில மாற்றங்கள் உண்டாகும்.
மக்களிடையே ஒற்றுமைகள் அதிகரிக்கும்.
விலைவாசியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகளினால் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
English Summary
guru peyarchi 2021 to 2022