வீட்டில் குபேர வாசம் உண்டாக... இந்த பொருட்களை இந்தக் கிழமையில் வாங்குங்கள்.! - Seithipunal
Seithipunal


மங்களகரமான பொருட்களை வாங்கும் பொழுது மங்களகரமான நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறுவது உண்டு. அந்த வகையில் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை இந்தக் கிழமையில் வாங்கும் பொழுது குபேரனின் அருள் கிடைப்பதாக ஐதீகம். 

எந்த பொருளை எந்த கிழமையில் வாங்கலாம்?

வீட்டில் வறுமையைப் போக்கும் தானியங்களை வாங்கும் பொழுது நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமையில் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக இருப்பதால் அந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் நம் வறுமையை நீக்கும். 

எனவே மளிகைப் பொருட்களை வாங்குவோர் வெள்ளிக்கிழமையாக பார்த்து வாங்குவது சிறப்பு! குறிப்பாக வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் மளிகை பொருட்கள் வாங்குவது குபேர சம்பத்தை பெருகச் செய்யும். 

தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வாங்கும் பொழுது சுக்கிர ஓரையில் அல்லது குரு ஓரையில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறப்பு! தங்கம் மேலும் மேலும் வளர இந்த நாளில் குளிகை நேரத்தை பார்த்து வாங்கலாம். குளிகையில் வாங்கும் எந்த பொருளும் மேலும் மேலும் வளர்ச்சியடையும் என்பது ஐதீகம். எனவே குளிகை நேரத்தில் தினமும் வீட்டில் உங்கள் குழந்தைகளிடம் சில்லறையை கொடுத்து உண்டியலில் சேமித்து வர சொல்லுங்கள், நாளடைவில் அது பெருக துவங்கும். 

 மகாலட்சுமி வாசம் செய்யும் கல் உப்பை வீட்டில் அதிகம் பயன்படுத்த வேண்டும். அறிவியல் ரீதியாக தூள் உப்பை விட, கல் உப்பு ஆரோக்கியம் நிறைந்தது என்று கூறப்படுகிறது. எனவே இந்த கல் உப்பை வெள்ளிக்கிழமை வளர்பிறை சுக்கிர ஓரையில் வாங்கி வைப்பது குபேரனின் அருளைப் பெற்றுக் கொடுக்கும். மேலும் குபேரனுக்குப் பிடித்த ஊறுகாயை வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை ஆகிய இரண்டு கிழமைகளில் வாங்கலாம். 

கட்டில், பீரோ, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற ஹோம் அப்ளையன்ஸ் வாங்கும் பொழுது குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில் வாங்குவது சிறப்பு! வீட்டிற்கு அலங்காரப் பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்கும் பொழுது சுக்கிர ஓரையில் வாங்க வேண்டும். சுகபோக வாழ்க்கையை தரக்கூடிய சுக்கிரனின் அருள் பெற சுக்கிர ஓரையில் இப்பொருட்களை வாங்குவது மேலும் மேலும் நம்மை வளர்ச்சி அடைய செய்யும். 

 சமையல் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என்று எந்த எண்ணெய் வாங்கினாலும் புதன் கிழமையில் வாங்குவது நல்ல பலன்களைக் கொடுக்கும். 

கண்ணாடி பொருட்களையும், கண்ணாடி வாங்கும் பொழுதும் ஞாயிற்றுக்கிழமையில் வாங்க வேண்டும். எப்போதும் வரவு, செலவு கணக்கை பெண்கள் கையாள வேண்டும். வரவு, செலவு கணக்குப் பார்த்து செலவு செய்யும் வீடுகளில் குபேர வாசம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to create kubera vasam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->