முன்னோர்களின் படங்கள் மற்றும் கடவுள் படங்களை பர்ஸில் வைக்கக்கூடாதா.?  - Seithipunal
Seithipunal


பர்ஸில் வைக்க வேண்டியவை:

உலகமே பணத்தை நோக்கி தான் ஓடி கொண்டிருக்கிறது. பணத்தை சார்ந்து தான் இயங்கி கொண்டிருக்கிறது. வீடுகளில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க நாம் பல வழிமுறைகளை பின்பற்றுகிறோம். நம்மில் பல பேரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் மணி பர்ஸ் கட்டாயம் இருக்கும்.

பொதுவாக நாம் பணம் வைத்து கொள்ள பயன்படுத்தும் பர்ஸ் அல்லது வாலட்களில் இதே போன்ற சில வழிமுறைகளை பின்பற்றினால், நிலையான பண வரவு இருக்கும் என்பது பலரின் அனுபவமாக இருக்கிறது.

அந்த வகையில் பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. அதாவது எந்த நிறத்தில் பர்ஸை வைத்துக் கொள்ளக்கூடாது? எந்த நிறத்தில் பர்ஸை வைத்து கொள்ளலாம்? என்ற சின்ன சின்ன விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

முடிந்தவரை பர்ஸை கருப்பு நிறத்தில் வாங்காமல் இருப்பது நல்லது. பிங்க் நிறம், பச்சை நிறம், கோல்டன் நிறம், சில்வர் நிறம் போன்ற பர்ஸை வாங்கினால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஐந்து ஏலக்காய்களை வைத்து கட்டி அதை பர்ஸில் வைத்துக்கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.

கத்தி, ஊசி, சாவி போன்ற கூர்மையான அல்லது உலோக பொருட்களை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள். இப்படி செய்வதால் அன்னை லட்சுமி கோபமடைந்து வாழ்வில் படிப்படியாக வறுமை ஏற்படும்.

பில்கள் அல்லது ரசீதுகள் போன்றவற்றை பர்ஸ் அல்லது வாலட்டில் வைத்திருக்க வேண்டாம். அவற்றை வைத்திருப்பது அவசியம் என்றால், அவை தேவைப்படும் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

முன்னோர்களின் படங்கள் மற்றும் கடவுள் படங்களை பர்ஸில் வைப்பது தவறு. முன்னோர்களையும், கடவுள்களையும் மதிக்க வேண்டும். ஆனால் அவர்களின் புகைப்படங்களை இப்படி பர்ஸில் வைத்திருப்பது தவறு.

பர்ஸ் அல்லது வாலட்டில் நோட்டை கசக்கி, ஒழுங்கற்ற முறையில் வைத்திருக்க வேண்டாம். இதை செய்வதால் அன்னை மகாலட்சுமி கோபமடைவார். எனவே எப்போதும் பணத்தை நன்றாக மடித்து, ஒழுங்காக வைத்திருங்கள்.

பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவேக்கூடாது.

விஷ்ணு அரச இலைகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பகவானின் அருள் இருந்தால், அன்னை லட்சுமியின் அருள் கிடைக்க தாமதம் ஆகாது. எனவே, அரச இலையை நீரில் சுத்தம் செய்து அதை பர்ஸில் வைத்திருங்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவேக்கூடாது. மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If we Use god Pictures In Purse


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->