ஜூலை மாத குப்த நவராத்திரி எப்போது தொடங்கும் ? - Seithipunal
Seithipunal


நவராத்திரி விழா என்பது ஒரு வருடத்திற்கு 4 முறை வருகிறது. அந்த நான்கு நவராத்திரிகளில் 2 குப்தர் மற்றும் 2 பிரகத் நவராத்திரி எனப்படும். பிரகத் நவராத்திரி பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும், ஏனென்றால் இந்த நவராத்திரி விழா சைத்ரா மற்றும் அஷ்வின் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. மேலும் இவை தவிர குப்த நவராத்திரி எனப்படும் 2 நவராத்திரிகளும் உள்ளன. 

இந்த குப்த நவராத்திரி விழா ஆஷாத் மற்றும் மாக் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. தற்போது வர உள்ள  ஆஷாத் குப்த நவராத்திரி விழா வருகின்ற ஜூலை மாதம் கொண்டாடப்படும். ஆஷாத் குப்த நவராத்திரியில் தேவி எந்த வாகனத்தில் வலம் வருவாள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வருகின்ற ஆஷாத் மாதத்தின் குப்த நவராத்திரி, சுக்ல பக்ஷத்தின் பிரதிபடா தேதியிலிருந்து நவமி தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த முறை இந்த குப்த நவராத்திரி வருகின்ற ஜூலை மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த முறை ஆஷாட குப்த நவராத்திரி 9 இல்லை 10 நாட்கள், சதுர்த்தி திதி அதிகரிப்பதால் இது போன்று தற்போது நடக்கிறது. இந்த குப்த நவராத்திரி தொடங்கும் நாளுக்கு ஏற்ப தேவியின் வாகனம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

வருகின்ற ஜூலை மாத ஆஷாட குப்த நவராத்திரி விழா ஜூலை 6 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்குவதால் தேவியின் வாகனம் குதிரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்த நவராத்திரியில், தேவியின் வழிபாடு ரகசிய முறைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

வருகின்ற இந்த நவராத்திரியில், தந்திரம், மந்திரத்தின் மூலம் தேவியை வழிபடுவது இன்றியமையாதது. வருகின்ற இந்த நவராத்திரியில் சிவனையும், சக்தியையும் அழிப்பவர்களான டாகினி, ஷாகினி, பேய்கள், பேதல் முதலியவைகள் சிறப்பாக வழிபடப்படுகின்றன. இந்த நவராத்திரியில் அவர்களை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான வெற்றிகளையும் பெறலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

July month guptha Navaratri when will be started


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->