கண் திருஷ்டி கணபதியை இனி இப்படி வணங்கி பாருங்கள்.! கைமேல் பலன்.!
KAN THIRUSTI GANAPATI
கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று ஊர் பக்கம் சொல்லாடல் உண்டு. ஒருவரது பார்வை இயல்பாக இருக்கும் பட்சத்தில் எந்தக் கெடுதலும்இல்லை. ஆனால், பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ண உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண்களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமை வாய்ந்ததாகும்.

இதனால் மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து அகஸ்திய மகாமுனிவர் சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார்.
அவர் தான் கண் திருஷ்டி கணபதி. கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டின் வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

மேலும், கடைகள், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் கண் திருஷ்டி கணபதி படத்தை வைத்து வழிபடலாம்.