பெருமாளின் இரண்டாம் அவதாரத்தை வழிப்பட உங்கள் வாழ்வை சுமிட்சமாக்கும்..!
Kurma Avathaara Workship
திருமாலின் கூர்ம அவதாரத்தை வழிப்பட்டு வந்தால் வாழ்வில் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்து சமய நம்பிக்கை படி கூர்ம அவதாரம் பகவான் மாகவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகும். சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும்.
அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைகையில், விஷ்ணு, ஆமை உரு எடுத்து பிடிமானமாக இருந்தார் என்பது வரலாறாகும். இந்த் அவதாரத்தை வழிப்பட்டால் வாழ்வில் சகல செல்லவங்களும் கிடைக்கும்.
கூர்ம அவதாரம் ஸ்லோகம்:
“ஓம் தராதராய வித்மஹ
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்”
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லிவர வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.