லட்டு விவகாரம் : திருப்பதியில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.

அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும்,  நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில், மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளும் திருப்பதி லட்டில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டிய நிலையில், கோவில் தோஷத்தை போக்க  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடத்தி கோவிலை தூய்மைப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laddu issue organized to hold kudamulukku in tirupati


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->