கிருஷ்ணர் ஒரு பிடி அவல் பெற்று குசேலனின் வறுமையை நீக்கிய மார்கழி புதன் இன்று..!! - Seithipunal
Seithipunal


மிகச்சிறந்த நண்பர்கள் என்றால் துவாரகையின் அரசனான கிருஷ்ணனுக்கும், ஏழ்மையில் வாழ்ந்த சுதாமாவுக்கும் (குசேலன்) இடையில் இருந்த நட்பு தான்.

சுதாமாவின் மனைவியின் பெயர் சுசிலா. பகவத் கீதையில் சுதாமாவிற்கு 27குழந்தைகள் எனக் குறிப்பிடப்படவில்லை. சுதாமா ஏழ்மையை ஆசையாய் ஏற்றார். சுசிலாவும் மனதார ஏழ்மையை ஏற்றாள். ஏழ்மை ஒருவனை எல்லா விதத்திலும் பக்குவப்படுத்துகிறது. நம் மனதில் தெய்வ நம்பிக்கையில் குறை காரணம் தரித்திரம், கஷ்டம் என தீர்மானித்துவிட்டோம். ஏழ்மையில் வாழ்வில் நடபதெல்லாம் நாராயணன் செயல் என்று ஏற்போம். பணம், பதவி, அந்தஸ்து வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றலாம் என்ற மமதை வந்துவிடும். 

ஆனாலும் பசி மிகப்பெரிய கொடுமை. பிள்ளைகளின் பசி பெற்றோரை பொய் சொல்லவைக்கும், திருடவும் தூண்டும். ஆனால் சுசிலா இதையெல்லாம் செய்யாமல் கிருஷ்ணரை சரணடைந்தாள். சுதாமா பெரிய ஞானி. வேதம் கற்று கிருஷ்ணரை அடைந்தவர் பலர். ஆனால் கிருஷ்ணரோடு வேதம் பயின்றவர் இவர் ஒருவரே. அப்படிப்பட்டவருக்கு ஏழ்மை என்பது வரம் அல்லவா. எல்லோரும் குருவை அடைந்து கிருஷ்ணரை அனுபவிப்பர். சுதாமாவோ கிருஷ்ணரோடு குருவிற்கு சேவை செய்தவர்.

ஆனால் சுசிலா பிள்ளைகளின் பசி எப்படி பொறுப்பாள். எப்படியாவது தன் கணவரை ஒரே ஒரு முறை துவாரகா அனுப்பினால், எல்லாம் மாறும் என்று திடமாக நம்பினாள். பல நாள் சுதாமாவிடம் துவாரகா போய்வரச் சொன்னாள். சரியென்று ஒரு நாள் கிளம்பினார்.

கிருஷ்ணருக்கு தர ஏதேனும் இருக்கிறதா என்றார் சுசிலாவிடம். வீட்டில் ஒன்றுமில்லையே. ஆனாலும் சுசிலா கலங்கவில்லை. அவளுக்கு ஊரார் வைத்த பெயர் க்ஷுத்க்ஷாமா, அதாவது பசியால் இளைத்தவள் என்று அர்த்தம். சுதாமாவிற்கும் பட்டப்பெயர் உண்டு, அதுதான் குசேலர். குசேலன் என்றால் கந்தலாடை உடுத்தியவர் என்று அர்த்தம். சுசிலா அருகிலிருந்த சில வீடுகளில் அவலை பிச்சையாக வாங்கினாள். அவள் வாங்கிய அவல் தான் சுதாமாவை கண்ணனிடம் கொண்டு சென்றது.

ஒருவழியாக துவாரகா வந்து சேர்ந்தார் சுதாமா. கண்ணனுக்குத் தன்னை ஞாபக்கப்படுத்த அவரிடம் இருந்த ஒரே அடையாளம் குரு மட்டுமே. குருவருள் தானே திருவருள். குருதியானத்தோடு துவாரகா வந்தவரை கிருஷ்ணன் ஆசையாய் வாசல் வந்து பழைய பால்ய சினேகிதனாகவே வரவேற்றார். அவரைக் கொண்டாடினான். வேதமாதாவின் திருவடியைப் பிடித்த சுதாமாவின் திருவடிக்கு வேதபுருஷனான கிருஷ்ணனே பூஜை செய்தான். எல்லா சுகமும் கேட்பவர்கள் கிருஷ்ணனை பூஜிக்கின்றனர். ஏதும் கேட்காத சுதாமாவை கிருஷ்ணனே பூஜித்தான்.

கிருஷ்ணர் இவர் சொல்லவந்த குருகுல நினைவுகளை சொல்ல ஆரம்பித்தார். தான் ஏதும் மறக்கவில்லை என்று புரியவைத்தார் கிருஷ்ணர். அப்பொழுது பேச்சுக்கிடையில் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றான். உயிரைத்தவிர அவர் உடலில் என்ன உண்டு, என்று ருக்மிணி மனதிற்குள் கிருஷ்ணரை கோபித்தாள். ஆயினும் இவன் மனம் உள்ளபடி யார் அறிவர். அவனே சொன்னான் 

"பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி !

 ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மனஹ !!

அதாவது ஒரு இலையோ, பூவோ, பழமோ ஒரு சொட்டு ஜலமோ, அன்போடு பக்தியாய் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கைநீட்டினான். எல்லோரும் கிருஷ்ணரிடம் கைநீட்டி கேட்பர். ஆனால் இவன் கைநீட்டிக் கேட்டது சுதாமாவிடம். ஆனாலும் சுதாமாவிற்கு தயக்கம், இத்தனை பெரிய அரசனுக்கு இந்த அவலை எப்படிக் கொடுப்பது..? 

ஆனாலும் அவல் தந்த அவள் மனதால் கிருஷ்ணரிடம் சரணடைந்தாள். கணவரின் மனமும், போக்கும் மனைவிதானே உள்ளபடி அறிவாள். கிருஷ்ணர் அவள் குரல் கேட்டு, இங்கே அவலை கொடுத்தார். எனக்கு மிகவும் பிடித்தது என்றான் அவள் தந்த ஒருபிடி அவலை வாயில் மென்றபடி. ஒரு பிடி அவளைப் பெற்ற கிருஷ்ணர் சுதாமாவின் வறுமையை போக்கினார். சுதாமா கிருஷ்ணருக்கு துவாரகையில் அவல் தந்த நாளே, மார்கழி முதல் புதன்கிழமை. இந்த நாள் குருவாயூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Load Krishna removed the poverty of Kuselan at Margazhi Wednesday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->