நிறைவடைந்த மண்டல பூஜை காலம் - சபரிமலை கோவில் நடை அடைப்பு.!
mandala poojai finished in sabarimalai ayyappan temple
சபரிமலை கோவிலில் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த கார்த்திகை 1-ந்தேதியிலிருந்து மண்டல காலம் தொடங்கியது முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சுமார் 41 நாட்கள் நடந்து வந்த பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெற்று வருகிறது. இதனைமுன்னிட்டு இன்று நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அய்யப்பன் தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த மண்டல பூஜையையொட்டி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தங்க அங்கி கொண்டு வரப்பட்டதால் நேற்று பிற்பகலுக்கு பிறகு பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படவில்லை. இன்றைய மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இது குறித்து கோவில் நிர்வாகம் தெரிவிக்கையில், "மீண்டும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைக்கு பிறகு இரவு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். அத்துடன் மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. பிறகு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக 3 நாட்களுக்கு பிறகு வருகிற 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mandala poojai finished in sabarimalai ayyappan temple