திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கா.? திருமணத்தடைக்கு தீர்வு தரும் சங்கு விநாயகர்.! - Seithipunal
Seithipunal


திருமணத்தடையை போக்கும் சங்கு விநாயகர்: 

நம் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைப்பது தான் திருமணம். திருமண கனவுகளோடு ஆண்களும், பெண்களும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திருமணம் சரியான நேரத்தில், சரியான வயதில் அமைந்துவிட்டால் சந்தோஷமே!!

ஆனால், ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களினால் திருமண வயது வந்தும், திருமணத்தடை காரணமாக பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி திருமணம் நிச்சயம் ஆகாமல் இருக்கும்.

இவ்வாறு திருமணம் ஆகாதவர்கள் சங்கு விநாயகரை நாள்தோறும் வணங்கி வந்தால் திருமணத்தடையை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிவார்.

சங்கு விநாயகர் :

சங்குகளில் அதிசயமான சங்கு, விநாயகர் முக வடிவத்துடன் இருக்கும். சங்கு விநாயகர் மிக அற்புதமான பலன்களை தரவல்லவர். இந்த கணேச வடிவ சங்கை வீட்டில் வைத்து வணங்குவதால் பலவிதமான நன்மைகள் மற்றும் தோஷங்களை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை அளிக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

கணேச சங்கை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் :

காரியத்தடை, திருமணத்தடை நீக்கும்...

சனி கிரக தோஷம் விலகும்..

ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்...

இதுபோன்ற தோஷம் இருப்பவர்கள் கணேச சங்கை வைத்து பூஜித்து வர அனைத்து தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும்.

காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை சங்கில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டு, பின் அந்த நீரை குடித்து விட்டு சென்றால் அன்றைய தினம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

வாகனங்களில் பயணம் செய்யும்போது இந்த சங்கை வைத்து வழிபட்டு வர வாகன பயணங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க இந்த சங்கு விநாயகர் அருள்புரிவார் என நம்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage problem solved sangu vinayagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->