புங்கை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா? விருட்ச சாஸ்திரம் கூறுவது என்ன.?!  - Seithipunal
Seithipunal


புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது கிரஞ்ச மரம் (milletia pinnata) என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவை தாயகமாக கொண்டது. 

புங்கன் மரம் - குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரம். புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும், வெண்மை நிறப்பூக்களையும், நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது. இதன் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. 

புங்கை எண்ணெயும் மருந்தாகும். டீசலும் தயாரிக்கப் பயன்படும். புங்கன் புண்ணாக்கு வரை அனைத்தும் இயற்கையின் வரப்பிரசாதமே.

இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து, இம்மரத்தின் கிளைகள் அதிகமான குளிர்ச்சி நிறைந்த காற்றை நமக்கு கொடுக்கும். இம்மரம் காற்றில் உள்ள மாசுக்களை (கார்பன்டை ஆக்ஸைடு) வடிக்கட்டி நல்ல காற்றினை (ஆக்சிஜன்) நமக்கு தரவல்லது.

அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது. 

வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்று குளிர்காற்றாக மாறும். அதன்மூலம், நம்மை தாக்கும் வெயிலின் உக்கிரம் குறையும். இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை, வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ அல்லது சுவர்களையோ பாதிக்காது. அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளர்க்கலாம்.

காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கன் மரம் அதிக உயரம் வளர்வது இல்லை. மெதுவாக வளரும் தன்மை உடையது.

விதை மூலம் இனப்பெருக்கம் செய்வது அதிகம். ஆனால் குச்சிகளை கொண்டும் வளர்க்கப்படுகின்றன. அதிவேக புயல் காற்றில் கூட சாயாமல் இருக்கும். ஆணிவேர் நீளமாக காணப்படும்.

புங்கன் மரக்காற்று குளிர்ச்சியானது. புங்கன் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்தல் நல்லது.

இளவேனில் காலத்திற்கு முன்பே இலைகளை உதிர்க்கும், இதனால் நிழலுக்காக அதிகம் நடப்படுகின்றன. இவற்றின் இலைகள் மண்புழு உரம் தயார் செய்யப் பயன்படுகிறது. மரக்கட்டைகள் எரிபொருளாக பயன்படுகிறது.

புங்கை மரத்தை வீட்டின் எந்த திசையில் வளர்க்க வேண்டும்?

வீட்டில் ஒரு மரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது அடர்ந்த பசுமையான இலைகளை கொண்டதால் நல்ல நிழலை தரக்கூடியது. இதன் இலைகள் புறஊதா கதிர்களை தாங்குகிறது.

மூங்கில் மரத்திற்கு அடுத்தபடியாக ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்வதில் புங்கை மரம் உள்ளது. வீட்டிற்கு அருகில் இருந்தால் நச்சு கிருமிகளின் பாதிப்பை தடுக்கிறது.

தெற்கு, மேற்கு பகுதிகளில் புங்கை மரங்களை வளர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Milttia pinata tree information


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->