ஆன்மீக தகவல்கள்... மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்வதால் என்ன பலன்.!  - Seithipunal
Seithipunal


* மூன்றாம் பிறை தரிசனம் முப்பிறவி பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சேர்வது அமாவாசை. ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாளை மூன்றாம் பிறை என அழைக்கிறோம். மாதத்தில் வரும் முக்கிய வைபவங்களில் ஒன்று சந்திர தரிசனம். இந்த நாளில் சந்திர பகவானை வழிபடுவதால் மன நிம்மதி வாழ்க்கையில் அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். 

* சந்திர பகவான் சாப விமோசனம் பெற்ற நாளாக இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் பிறை தெய்வீகப் பிறை என சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையை தான் சிவபெருமான் தனது முடி மீது சூட்டியுள்ளார். மூன்றாம் பிறையை தரிசித்தால் சிவபெருமானின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததற்கு அர்த்தம். 

* மூன்றாம் பிறையை தரிசனம் செய்பவர்கள் வாழ்வில் வற்றாத செல்வம் பெருகும். மூன்றாம் பிறையை பார்த்தால் மன நிறைவு, மன அமைதி, பேரானந்தம் கிடைக்கும். மனகஷ்டங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி கூடும். 

* மூன்றாம் பிறையை காண்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும். சந்திரனின் நட்சத்திரங்கள் ஆன ரோகினி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கை முழுவதும் சந்திர தரிசனம் செய்தால் பரிபூரண அருள் கிடைக்கும். 

* மூன்றாம் பிறையை வழிபட ஒரு தட்டில் பச்சரிசி அதன்மேல் காமாட்சி அம்மன் விளக்கு, அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். 

* பிறை நிலவை தன் தலையில் சூட்டிக்கொண்டிருக்கும் சிவபெருமானை நாம் மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் நம்மை விட்டு போக வேண்டும் என்று நினைத்து நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையானதை பிரார்த்தனை செய்ய வேண்டும். 

* வழிபாடு செய்த நாளில் உயிர்களுக்கு தானம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த நாளில் வழிபாடு செய்தால் பிறை நிலவுப்படி படியாக எப்படி வளர்ந்து கொண்டே போகிறதோ அதுபோல் நமது வாழ்க்கையும் படிப்படியாக வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moondram pirai darshan benefits tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->