அஷ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதில் கைதேர்ந்தவர்கள் தெரியுமா?
Personality Traits of People Born under Ashwini Nakshatra
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் 12 ராசிகளின் நிலை எப்படியோ அதேபோல 27 நட்சத்திரங்களில் நிலையும் மிக முக்கியமானது. அந்தவகையில், நட்சத்திரங்கள் வரிசையில் முதலாவது நட்சத்திரமாக வருவது அஸ்வினி நட்சத்திரம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சுறுசுறுப்புபாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள். மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற தீராத தாகம் கொண்டவர்கள். எந்த காரியத்தையும் வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் முடிக்க கூடியவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் ஆர்வமாக எளிதாக புரிந்து கொண்டு முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்கள்.

இவர்கள் எதிரிகளை சமாளிப்பதில் கைதேர்ந்தவர்கள். எதையும் ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். எந்த கடினமான சூழலிலும் பொறுமையையும், தெய்வ பக்தியையும் இவர்கள் கைவிடமாட்டார்கள். இந்த அஷ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாரம்பரியமான விஷயங்களை விரும்புவராக இருந்தாலும் கூட நவீனத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.
உயர் கல்வி கற்கும் யோகத்தைப் பெற்றவர்கள். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஞானம் பெற்றிருப்பார்கள். அத்துடன், கலையில் ஆர்வம் உள்ளவர்கள். கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்கள். அமானுஷ்யம், சமயம் மற்றும் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
அத்துடன், எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையையும், கண்ணியத்தையும் கடைப்பிடிப்பார்கள்.

இவர்கள் வங்கி, மருத்துவம், ரசாயனம், மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை போன்ற துறைகளில் ஈடுபடக் கூடியவர்கள். வானியல், ஜோதிடத்திலும், விஞ்ஞானத்திலும் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குவார்கள்.
இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கின்ற யோகம் இருந்தாலும் கூட, சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணைவியிடமும், பிள்ளைகளிடமும் பாசமாக இருக்கும் இவர்கள் அவர்கள் தன்னைப் போலவே நீதி, நேர்மை தவறாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.
இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே சாதாரணமான நோய்களே வருவதால், எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்கள்.
English Summary
Personality Traits of People Born under Ashwini Nakshatra