திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல தடை?....யானை தாக்குதலில் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யானை தெய்வானை மதம் பிடிப்பதுபோல் இன்று நடந்துகொண்டது. அதாவது திடீரென இன்று காலை யானைப் பாகனான உதயகுமாரையும், கோயிலுக்கு வந்த அவரது உறவினர் சிசுபாலன் என்பவரையும் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கோவிலில் இருந்தவர்கள் படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலில் உள்ள யானையின் குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prohibition to go to tiruchendur temple action taken in elephant attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->