இன்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை... பெருமாளின் அருளை பெற... இது ஒன்னே போதும்.!
Purattasi 2 nd sanikizhamai Viratha vazhipadu 2022
புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு மிகவும் உகந்த நாட்கள் தான். இந்த நாள், அந்த நாள் என குறிப்பிட்டு சொல்லாமல் புரட்டாசி மாதம் முழுவதுமே வீட்டில் இருந்தவாறு பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.
அதிலும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், ஏழரைச் சனி, பாதச்சனி அஷ்டமத்துச் சனி, உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை பெருமாளை மனதார வழிபட்டால் போதும்.
இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு எப்படி செய்வது.?
முதலில் பூஜையறையை சுத்தமாகவும், நல்ல வாசனையோடும் வைத்திருக்க வேண்டும். அதிலும், துளசியின் நறுமணமும், பச்சை கற்பூரத்தின் நறுமணமும் பெருமாளுக்கு மிக நல்லது.
அத்துடன் துளசி இலைகளால் பெருமாளுக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக பெருமாளுக்கு ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தீபம் ஏற்றும்பொழுத்ய் 'ஓம் நமோ நாராயணா" என கூறிக்கொண்டே விளக்கை ஏற்றுங்கள்.
நம் சக்திக்கு ஏற்றவாறு 3, 5, 21, 51, 101 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய்களை நூலில் கோர்த்து பெருமாளுக்கு மாலையாக அணிவிக்க வேண்டும்.
அதன் பிறகு பெருமாளின் முன்பு உட்கார்ந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பின், மனதில் பெருமாளை நினைத்துக் கொண்டு, தீபாராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்யவும். இந்த ஏலக்காய் மாலை பெருமாளின் படத்திலேயே மூன்று நாட்கள் இருக்கட்டும்.
அதன் பின்பு அந்த ஏலக்காய் மாலையை எடுத்து, பொடி செய்து அன்றாடம் பாலில் போட்டு குடிக்கலாம்.
'ஓம் நமோ நாராயணா" என மந்திரத்தை உச்சரித்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்றவாறு பிரார்த்தனை செய்யவும்.
அத்துடன் இந்த பூஜையினால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
பணப்பிரச்சனை, கடன் சுமை, சுபகாரியத்தடை, குழந்தை இல்லாதவர்கள், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குடும்பம் செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், நோய் நொடி இல்லாமல் வாழ இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
English Summary
Purattasi 2 nd sanikizhamai Viratha vazhipadu 2022