நிதானமாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கும் திறமை கொண்ட ராசிகர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ராகு கேது பெயர்ச்சி:

நிதானமாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே.!

ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கும்ப ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

பலன்கள் :

புதிய முயற்சிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். சவாலான காரியங்களையும் திறமையுடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

பொருளாதாரம் :

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

உடல் மற்றும் ஆரோக்கியம் :

உடல்நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் விரைவில் குணமடைந்து விடுவீர்கள். காப்பீடு தொடர்பான விஷயங்களில் புரிதலும், உதவியும் கிடைக்கும்.

பெண்களுக்கு :

தம்பதியர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகளை உருவாக்கி கொண்டு இருந்தவர்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சில அலைச்சல்களுக்கு பின்பு ஆதாயம் உண்டாகும்.

மாணவர்களுக்கு :

உடனிருப்பவர்களின் பேச்சுக்களில் மயங்காமல் சிந்தித்து செயல்படவும். நவீன பொருட்களின் மூலம் சில விரயங்கள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

சமூகத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :

மனை சார்ந்த செயல்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். இயற்கை வேளாண்மையின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் அமையும்.

அரசியல்வாதிகளுக்கு :

சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாக செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறையில் தொழில்நுட்ப சிந்தனைக்கேற்ப ஆதரவுகளும், உதவிகளும் கிடைக்கும். எதிலும் பற்றற்று செயல்படுவீர்கள்.

நன்மைகள் :

நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்களும், குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பீர்கள்.

கவனம் :

தந்தைவழி உறவினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர செய்கின்ற முயற்சிகளில் உதவியும், சாதகமான சூழ்நிலைகளும் உண்டாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragu gethu peyarchi 2022 for gumbam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->