புதுமையான செயல்பாடுகளினால் அனைவரையும் ஈர்க்கும் ராசிக்கு ராகு- கேது பெயர்ச்சி பலன்கள்.!  - Seithipunal
Seithipunal


புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே.!

ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகுவானவர் மேஷ ராசியான உங்களுடைய ஜென்ம ராசியிலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேதுபகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்.

பலன்கள் :

வித்தியாசமான சிந்தனைகளும், பழக்கவழக்கங்களில் மாற்றங்களும் உண்டாகும். மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பதற்கான திறமையும், வாய்ப்பும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். வித்தியாசமான பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வதன் மூலம் சேமிப்புகளை அதிகரிக்க இயலும்.

உடல் மற்றும் ஆரோக்கியம் : 

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பார்வை சார்ந்த இன்னல்கள் நீங்கும்.

பெண்களுக்கு :

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நுட்பமான சிந்தனைகளை செயல்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். 

மாணவர்களுக்கு :

கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு தகுதிகளுக்கேற்ப உயர்வான வாய்ப்புகள் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மையினை ஏற்படுத்துவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் சூழ்நிலைகளை அறிந்து, சிந்தித்து செயல்பட்டால் மேன்மையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களின் மூலமாக மக்களின் ஆதரவு மேம்படும். கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் புதிய முயற்சிகளுக்கேற்ப ஒத்துழைப்பு உண்டாகும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

வழிபாடு :

ராகு நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் நீங்கி, எண்ணங்களில் தெளிவு ஏற்படும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragu kethu peyarchi palankal 2022 for mesham


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->