ராம நவமி 2025; பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் பூஜை முறைகள்..! - Seithipunal
Seithipunal


ஸ்ரீ ராம நவமி

விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறப்பை கொண்டாடும் ஒரு பண்டிகை. ஏப்ரல் 06-ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.08 முதல் ஏப்ரல் ஏழாம் தேதி அதிகாலை 12.25 வரை நவமி திதி உள்ளது. ராமபிரானின் புனர்பூச நட்சத்திரமும் நவமி திதியும் இணைந்து வரும் ஏப்ரல் 06-ஆம் தேதி ஸ்ரீ ராமநவமி கொண்டாடப்படுகிறது. அன்று ராம கதை படிப்பதும், பஜனை மற்றும் கீர்த்தனைகள் மூலமும் வழிபாடுகள் சிறப்பாக செய்யப்படும்.

ராமரின் பிறந்த இடமான அயோத்தியிலும், இந்தியா முழுவதும் உள்ள ராமர் கோவில்கள், வைணவ தளங்களில் , ஏனைய கோவில்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் ராம நவமியைக் கொண்டாடுவதற்கு சில விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள் . அவை என்னவென்று இந்த பதிவில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

01. வீட்டை சுத்தம் செய்தல்.

உங்கள் வீடு சுத்தமாகவும், தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். அது பூஜை செய்வதற்கும், ராமரை வழிபடுவதற்கும் மிகவும் அவசியமாகும்.

02. காலையில் புனித நீராடுவது.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து புனித நீராட வேண்டும். வீட்டிலோ அல்லது குளம், ஏரிகளில் நீராடலாம். இதனால் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி பெரும்.

03. வீடு, பூஜை பலிபீடத்தையும் அலங்கரித்தல்.

வீட்டு பூஜை அறையில் உள்ள பலிபீடத்தை சுத்தம் செய்து அங்கு ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அல்லது படத்தை வைத்து, அதை ஒளிரும் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கவும். மா-இலைகளால் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு சிறிய கலசத்தை வைத்து, உங்கள் பலிபீடத்தில் ஒரு பஞ்சமுகி ஹனுமான் கவச் யந்திரத்தை வைக்க வேண்டும், இது வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் வெற்றியைக் சேர்க்கும்.

04. நெறிமுறை உடை அணிதல்.

வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற வெளிர் அல்லது பிரகாசமான வண்ணங்களை அணிய வேண்டும். பூஜை சடங்கையும் கடைப்பிடிக்கும் நாளில், அதேபோல் எந்தவொரு பூஜை செய்யும்போதும் கருப்பு நிறத்தை அணிவதை தவிர்த்தல் நல்லது.

05. விரதம்.

ஸ்ரீ ராமா பிரானின்  ஆசீர்வாதங்களைப் பெற இந்த நாளில் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். விரத வகைகளில், அவர்களின் பசியின்மை திறனைப் பொறுத்து, நிர்ஜல மற்றும் பலஹர விரத வகைகளைத் தேர்வு செய்யலாம். அதாவது நாள்முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம். குறிப்பாக மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நன்று. 

06. பகவத் கீதை அல்லது ராமாயணத்தை ஓபாராயணம் செய்தல்,  ராம மந்திரங்கள் மற்றும் பஜனைகளை உச்சரித்தல்.

ராம நவமி அன்று பகவத் கீதை அல்லது ராமாயணத்தை ஓதுவது நல்லது. ஏனெனில் அது உங்கள் ஆன்மாவை தூய்மைப்படுத்த உதவுகிறது. உள் மன மகிழ்ச்சியையும் அமைதியையும் உயர்த்த உதவும் புனித ராம மந்திரங்களை உச்சரிக்கலாம். இது உங்கள் ஆன்மாவை உள்ளே பிரகாசிக்கச் செய்யும், மேலும் உங்கள் துக்கத்தையும் போக்க உதவும்.

 "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்" மற்றும் "ஓம் ஸ்ரீ ராமாய நம" என்று பக்தியுடன் சொல்லுங்கள். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும்; உங்கள் அடைபட்ட சக்கரங்களை சமநிலைப்படுத்தவும் உதவும்.

07. தானம் செய்தல்.

இந்த நாளில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்குவது போன்ற நற்செயல்களை செய்யவது நல்லது. 

08. மது, அசைவ உணவு, தகாத வார்த்தைகள் தவிர்த்தல்.

ராமநவமி நாளில் மது, போதை பொருட்களை தொடவே கூடாது. அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவது பெரும் பாவமாகும். அத்துடன், யாரிடமும் கோபம் காட்டாமல், கொட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல், பிறரை துன்புறுத்தாமல்ஸ்ரீ ராமனை துதித்தபடி இருப்பது உங்களை புனிதமாக்கும்.

09. ஒரு மரத்தை நடுதல்.

ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தை காட்டில் தான் கடந்தார். அதை நினைவுகூரும் வகையில் ஒரு மரம் நடலாம். மரங்கள் நமது சுற்றுச்சூழலை சுத்தமாகவும், பசுமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்றவும், நமது பூமியை அழகாகவும் மாற்றவும் உதவுகின்றன. 

10. சமூகக் கொண்டாட்டங்களில் பங்கேற்றல்.

ராம நவமி அன்று கோவில்களிலும், ராமா பஜனை போன்ற சமூகக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது நன்மை. ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்டு, பஜனைகள் (பக்திப் பாடல்கள்) மற்றும் கீர்த்தனைகளைப் பாடுவது போன்ற பக்தி நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுவது சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rama Navami 2025 Things to be observed by devotees and methods of worship


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->