முன்ஜென்ம பாவங்களை போக்கும் ருத்ரசக்தி வில்வ மாலை.!
Rudhrasakthi vilva malai special
சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலியுடன் சேர்த்து அணிவதால் வாழ்விலுள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை.
வில்வ மாலை :
சிவனுடைய அருளையும், அன்பையும் பெறுவதற்கு வில்வ மாலை ஒன்றே போதும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களை போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.
வில்வ மாலை அணிவதால் 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். தினந்தோறும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபடுவது என்பது இயலாத காரியமே. வில்வ மரக்கட்டை கொண்ட ருத்ராட்ச மாலையை அணிவதால் சிவபெருமானின் அருள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ருத்ராட்சம் :
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்களை போல் காப்பவர். ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது. ருத்ராட்சம் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, மனதைரியத்தை தரவல்லது.
ருத்ராட்சம் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் புத்திக்கூர்மையையும் பொறுமை, பக்குவம் மற்றும் அமைதியான மனநிலையை பெற்றுத்தரும். உடலுக்கும், மனதிற்கும் அதிகமாக சக்தி தரும் வல்லமை கொண்டது ருத்ராட்சம்.
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளை தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டதால் வீட்டில் கருங்காலியை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும். சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலியுடன் சேர்த்து அணிவதால்
முன்ஜென்ம பாவங்களை போக்கும்..
மன அமைதி கிடைக்கும்..
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது..
தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவல்லது..
கஷ்டங்களில் இருந்து பாதுகாக்கக்கூடியது..
எதிர்மறை எண்ணங்களை குறைக்கவல்லது.
English Summary
Rudhrasakthi vilva malai special