இறைசக்தியுடன்.. முன்ஜென்ம பாவங்களை போக்கும்.. ருத்ராட்ச வில்வ மாலை.!
Rudhratcha vilva malai special
அற்புதங்கள் நிறைந்த ருத்ராட்ச வில்வ மாலை..!!
ருத்ராட்சத்தின் சிறப்பு :
ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. ருத்ராட்சத்தை பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.
ருத்ராட்சம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றில் புண் உருவாகிறது. அதன் அடையாளமாக வாயில் புண் உண்டாகிறது. வயிற்றிற்கும், வாய்க்கும் இடைப்பட்ட கழுத்துப் பகுதியில் கட்டப்படும் ருத்ராட்சம் இந்த அதீத வெப்பத்தை உறிஞ்சி விடுகிறது. மேலும், கண்திருஷ்டியிலிருந்து நம்மை காக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.
வில்வத்தின் சிறப்பு :
சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்ய நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு எப்படி துளசி எனும் அற்புத மூலிகை பிடித்ததாக இருக்கின்றதோ, அதேபோல் வில்வ மரத்தின் இலை, பழம் சிவபெருமானுக்கு இஷ்டமானது.
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும், அதோடு பல அபூர்வ பலன்களை கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளை தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டதால் வீட்டில் கருங்காலியை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும். சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலியுடன் சேர்த்து அணிவதால் வாழ்விலுள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை.
ருத்ராட்ச வில்வ மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள் :
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் கிடைக்கும்.
தீய சக்திகளிலிருந்து நம்மை காப்பாற்றும்.
மோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும்.
உடல் பிணிகளை போக்கக்கூடியது.
மனதினை எதிர்மறை சிந்தனையில் இருந்து பாதுகாக்கிறது.
English Summary
Rudhratcha vilva malai special