வீரத்தை செயலிலும், விவேகத்தை பேச்சிலும் காட்டுகின்ற ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்:

விருச்சிக ராசி:

விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் அதிசார பெயர்ச்சியின் காரணமாக நான்காம் இடத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார். 

சனி பார்வை படும் ராசிகள் :

சனி தான் நின்ற ராசியிலிருந்து,

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான சத்ரு ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான தொழில் ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான ஜென்ம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

பலன்கள் :

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயனற்ற அலைச்சல்கள் குறைந்து காணப்படும். புதிய முயற்சிகளில் செயல்படும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வீடு மற்றும் புதிய வாகனம் வாங்குவதற்கான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் சோர்வும், செயல்பாடுகளில் ஒருவிதமான காலதாமதமும் ஏற்படும். 

வேலை தவறாது உணவு எடுத்துக்கொள்வது பல விரயங்களை குறைக்கும். மற்றவர்களிடம் கருத்துக்களை பரிமாறுவதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறுவதில் பல தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். எந்தவொரு வேலையும் அன்றைய தினத்தில் செய்து முடித்துக் கொள்வது நல்லது. பயணங்களின்போது கால்நடைகளிடம் கவனம் வேண்டும்.

இடம் மாறுதல் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டித் தேர்வுகளில் உழைப்பிற்கு உண்டான முடிவும், ஊதியமும் கிடைக்கும். செல்லப் பிராணிகளிடம் நிதானத்தை கையாளவும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sanipeyarchi palankal for viruchika rasi 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->