சிவன்மலை முருகன் கோயில் கண்ணாடி பெட்டியில் வேல் வைத்து பூஜை!
Sivanmalai Murugan Temple Puja with Vel in Glass Box
ஆண்டவன் உத்தரவால் பெட்டியில் வேல் வைத்து பூஜை!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் சிவன்மலை முருகன் கோயிலுக்கு உண்டு. ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருவது வழக்கம். பின்னர் அந்த பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கல் தூணில் உள்ள கண்ணாடி பேனைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பார்கள்.
சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து என்ன பொருளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜூன் 8ம் தேதி நிறைப்படி கம்பு தானியம் வைத்து பூஜை செய்யப்பட்டு அந்த பொருள் புதன்கிழமை வரை கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் மாவட்டம் குமரன் நகர் சேர்ந்த கே.ஆர் கார்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் வந்த முருகர் வேல் வைத்து பூஜை செய்யும் படி உத்தரவிட்டுள்ளார். இதனால் வியாழக்கிழமை வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்த நிறைப்படி கம்பு நீக்கப்பட்டு தற்போது வேல் பக்தர்களின் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Sivanmalai Murugan Temple Puja with Vel in Glass Box