சிவன்மலை முருகன் கோயிலில் நெற்கதிர் வைத்து வழிபாடு...!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தை அடுத்த காங்கேயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் அமைந்துள்ளது. எந்த ஒரு கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் சிவன்மலை முருகன் கோயிலுக்கு உண்டு. இந்த கோவிலில் பக்தர்களின் கனவில் வரும் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பின்னர் அந்த பொருளை மூலவர் சன்னதிக்கும் முன்பாக இருக்கும் கற்தூணில் உள்ள கண்ணாடி பெட்டியில் பக்தர்களின் பார்வைக்காக வைப்பார்கள்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு பக்தரின் கனவில் வந்த முருகன் இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு வைத்து வழிபடுவதாக உத்தரவு அளித்தார். அதன் அடிப்படையில் முருகன் சன்னதியில் இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு வைத்து வழிபாடு செய்யப்பட்டு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை அடுத்த காங்கேயம் அருகே காரையூர் பகுதியைச் சேர்ந்த பேபி என்ற பெண் பக்தரின் கனவில் வந்த முருகன் நெற்கதிர் வைத்து வழிபாடு செய்ய உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் இன்று சிவன்மலை முருகன் சன்னதியில் நெற்கதிர் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் மூலவர் சன்னதியின் முன்பு உள்ள கண்ணாடி பெட்டியில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivanmalai Murugan Temple Worship with Paddy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->