இன்று தை அமாவாசை.. காக்கைக்கு உணவிடுவதற்கு பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா.?! - Seithipunal
Seithipunal


படையலிடம் பொழுது ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறார்கள்.?: 

இன்று தை அமாவாசை. முன்னோர்களை வழிபட்டு படையலிடும் சாதத்தை காகத்திற்கு வைத்து காகம் உண்ட பின்னர் தான் வீட்டில் இருப்பவர்கள் இலை போட்டு விரதம் முடிப்பது வழக்கம். அப்படி நாம் வைக்கின்ற உணவை காகம் சாப்பிடும்பொழுது, முன்னோர்கள் அதனை சாப்பிட்டு நமக்கு ஆசி வழங்குவதாக நம்பப்படுகிறது. 

அமாவாசை தினத்தில் நாம் சமைக்கின்ற உணவை முன்னோர்களுக்கு படைத்துவிட்டு காகத்திற்கு வைக்கிறோம். இதில், கீரை, கிழங்குகள், காய்கறிகள் போன்ற வகைகள் இருக்க வேண்டும். முக்கியமாக வாழைக்காய் வைக்க வேண்டும். ஏனென்றால் வாழையடி வாழையாக குலம் தழைக்க முன்னோர்களின் ஆசி கண்டிப்பாக கிடைக்க வேண்டும். 

முன்னோர்களின் இறந்த நாட்கள், மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் வழிபட்டு காகத்திற்கு உணவு வைக்கப்படுகிறது. அதன் பின்னர், தான் வீட்டில் இருப்பவர்கள் விரதம் செய்து சாப்பிடுவார்கள். 

காகத்திற்கு தினமும் சாப்பாடு வைத்தால் பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்யும்பொழுது கடன் பிரச்சனை தீர்ந்து, செய்வினை கோளாறுகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. 

சனியும், எமனும் சகோதரர்கள். காக்கைக்கு உணவு அளித்தால், அவர்கள் இருவரும் திருப்தி அடைந்து நம்மீது கருணை காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. சனி பகவானின் வாகனம் காகம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனாகவும் செயல்படுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே, தான் வழிபாட்டு நடைமுறைகளில் காகத்திற்கு உணவு வைப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thai ammavasai special 22


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->