தாராபலனை வைத்து.. உங்களுடைய அதிர்ஷ்ட நாளை கணக்கிடுவது எப்படி? - Seithipunal
Seithipunal


தாராபலன் என்றால் என்ன?

இன்றைய தினம் நமக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய தினமா? இல்லையா? என்பதை அறிய நாம் அன்றைய தினத்தின் தாராபலனின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும்.

தாரை, தாரா போன்ற சொற்கள் யாவும் சந்திரன் பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நட்சத்திரத்தை குறிக்கக்கூடியதாகும். சந்திரன் கோச்சார ரீதியாக தன்னுடைய பலாபலன்களை தாரை மூலமாக அவர் வழங்கிக் கொண்டே இருக்கின்றார்.

பொதுவாக ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றாரோ அந்த நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜென்ம நட்சத்திரம் என்பது எப்பொழுதும் மாறக்கூடியது அல்ல. இப்பிறவியில் ஜென்ம நட்சத்திரம் என்பது ஒன்றேயாகும்.

ஆனால் மனோகாரகனான சந்திரன் தினம் தினம் வௌ;வேறு நட்சத்திரங்களில் பயணம் செய்துகொண்டே இருப்பார்.

நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவரவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சந்திரன் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நட்சத்திரம் நட்பா? சாதகமா? சேமமா? அல்லது வதையா? விபத்தா? என்பதை அறிந்து செயல்படுவதே தாராபலன் ஆகும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது வருகின்ற 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

தாரைகளின் பெயர்களும், பலன்களும் :

1. ஜென்ம தாரை - மனக்குழப்பம் மற்றும் பதற்றத்தை தரும்.

2. சம்பத்து தாரை - பொருள்வரவு, காரிய சித்தி, சுபகாரியம் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.

3. விபத்து தாரை - கோபத்தால் காரிய இழப்பு, வாய்ப்புகள் தவறுதல் போன்றவை உண்டாகும்.

4. சேமத் தாரை - ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான நாள்.

5. பிரத்தயக்கு தாரை - சிக்கல்கள், கவனச்சிதறல், வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும்.

6. சாதக தாரை - எண்ணம் ஈடேறுதல், முயற்சிகள் பலிதமாகுதல் மற்றும் செயல்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.

7. வதை தாரை - உடலில் சோர்வு, மனதில் இனம் புரியாத கவலைகள், பணிகளில் நாட்டமில்லாமல் இருப்பது போன்றவை உண்டாகும்.

8. மைத்திர தாரை - தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.

9. பரம மைத்திர தாரை - அனைத்து சுபச்செயல்களுக்கும் உகந்தது.

உதாரணமாக,

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் என்பது அஸ்வினி நட்சத்திரம் எனக் கொள்வோம்.

சந்திரன் பயணம் செய்யும் நட்சத்திரம் அஸ்த நட்சத்திரம் எனக் கொள்வோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து அஸ்த நட்சத்திரம் வரை எண்ணி வர அஸ்த நட்சத்திரமானது 13வது நட்சத்திரமாக உள்ளது.

13-ஐ 9-ஆல் வகுக்க ஈவு என்பது ஒன்றாகவும், மீதி என்பது நான்காகவும் இருக்கும். 

இங்கு மீதிக்கு மட்டுமே மதிப்பாகும்.

நான்கு என்பது சேம தாரையை குறிக்கக்கூடியதாகும். 

ஆகவே, அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு அஸ்த நட்சத்திரம் நடக்கும்பொழுது ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

இதேபோன்று அவரவர் ஜென்ம நட்சத்திரங்களுக்கு சந்திரனின் நட்சத்திரங்களை அறிந்து அன்றைய தினத்தின் வலிமையை அறிந்து அதற்கு உண்டான காரியங்களை மேற்கொண்டு வெற்றி காண்பீர்களாக.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thara palanai vaithu adhirdathai kanakiduvadhu eppadi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->