திருமாலின் பத்து அவதாரங்களும்... அதன் சிறப்புகளும்...! - Seithipunal
Seithipunal


திருமாலின் பத்து அவதாரங்கள்:

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். தசம் என்றால் பத்து என்று பொருள்.

காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி, நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் எடுத்தார்.

அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து அவதாரங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

1. மச்ச அவதாரம் : சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்து கொண்ட போது, திருமால் பெரிய சுறா மீனாக (மச்ச) உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

2. கூர்ம அவதாரம் : திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார்.

3. வராக அவதாரம் : இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த, பெருமாள் வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார்.

4. நரசிம்ம அவதாரம் : தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டு இரண்யனைக் கொன்றார்.

5. வாமன அவதாரம் : மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். 

6. பரசுராம அவதாரம் : ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம்.

7. ராம அவதாரம் : ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராம அவதாரம்.

8. பலராம அவதாரம் : திருமால் கிருஷ்ண அவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கௌரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு.

9. கிருஷ்ண அவதாரம் : கம்சன் என்ற அசுரனை அழிக்க திருமால் எடுத்த அவதாரம் கிருஷ்ண அவதாரம்.

10. கல்கி அவதாரம் : கல்கி அவதாரம் என்பது மகாவிஷ்ணுவின் பத்தாவதும், இறுதியுமான மகா அவதாரமாகும். இவர் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது மக்களின் நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumal avatar and special


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->