அன்னதானத்திற்காக 11 கோடி ரூபாய் நன்கொடையாக தந்த தனி இருவர்!
Thirupathu Temple Annathanam
திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதானத்திற்காக மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் 11 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடை ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு பக்தர் துஷ்கர் குமார் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985ல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் 2,000 பக்தர்களுக்கு இலவச உணவு வழங்க *வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டம்* அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவால் இது தொடங்கப்பட்டது. 1994ல், இது *ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் அறக்கட்டளை* என மாற்றப்பட்டது. 2014ல், *ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளை* என மறுபெயரிடப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் நன்கொடைகள் தேசிய வங்கிகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை, கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்க பயன்படுத்தப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெரிய சமையல் கூடத்தில் தினசரி 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது. அதற்காக தினமும் 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று நேர உணவாக வழங்கப்படுகிறது.
English Summary
Thirupathu Temple Annathanam