திருவண்ணாமலை கிரிவலம்: பக்தர்கள் கவனத்திற்கு - வெளியான முக்கிய அறிவிப்பு!
Thiruvannamalai Girivalam TN Rains
கனமழை எச்சரிக்கையால், புரட்டாசி மாத பெளர்ணமியை ஒட்டி நாளை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலை நகரில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலமானது 16.10.2024 அன்று மாலை 8.00 மணி முதல் 17.10.2024 மாலை 5.38 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 15.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை (Heavy to Very heavy rainfall - Orange Alert) இருக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வயதானவர்கள், குழந்தைகள், உடல் நலிவுற்றவர்களுக்கு மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக மழைப் பொழிவினை பொறுத்து பக்தர்கள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பெருமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைபாதிப்புகள் தொடர்பான மழை தொடர்பான பாதிப்புகள் 1077, 04175-232377, மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் 94987 94987 என்ற தொலை பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Thiruvannamalai Girivalam TN Rains