நிதானமே பிரதானம்... எதிலும் நேர்மை... வைராக்கியம் குணம்... இவர்களிடம் பார்க்கலாம்..!
thulam rasi palangal
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.
அந்த வகையில், இன்று 7-வது ராசியான துலாம் ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
துலாம் ராசி :
துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார்.
துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4ம் பாதமும், சுவாதி, விசாகம் நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்களும் இதில் அடங்கும்.
துலாம் ராசியின் வேறுபெயர்கள் :
நிறைக்கோல், துலாக்கோல், துலை, கோல், தராசு.
பொதுவான குணங்கள் :
பல விஷயங்களை அறிந்து வைத்திருப்பார்கள்.
சிகை அலங்காரத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
மனதில் லட்சியம் உடையவர்கள்.
மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
ரகசியம் பலவற்றை கொண்டவர்கள்.
சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
மற்றவர்களை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.
அனைத்து மக்களிடமும் பழகும் குணம் கொண்டவர்கள்.
எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள்.
தனித்து செயல்படக்கூடியவர்கள்.
வாக்கு சாதுர்யம் உடையவர்கள்.
வைராக்கிய குணம் கொண்டவர்கள்.
பொறுப்புகள் அதிகம் கொண்டவர்கள்.
பயணம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள்.
பொதுநலம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்.
செல்வாக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.