புரட்டாசி முதல் சனி - அதிகாலையிலே கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.!
today purattasi saturday special pooja in erode kasthoori aranganathar temple
புரட்டாசி முதல் சனி - அதிகாலையிலே கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.!
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோவில்களில் ஒன்றான கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகளும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று புரட்டாசி மாதம் ஆரம்பமாகி இன்று முதல் சனிக்கிழமை என்பதால் கோயில் வளாகம் முழுவதுமே செவ்வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பக்தர்கள், கோவில் பணியாளர்கள் நேற்று மாலை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல், சாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக பத்தாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
அதன் படி இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அரங்கனை தரிசிக்க கோவிலுக்கு வர துவங்கியுள்ளனர்.
பக்தர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
English Summary
today purattasi saturday special pooja in erode kasthoori aranganathar temple