12 ஜோதிலிங்க தலங்கள்..மரகதத்தால் ஆன மூலவர்..அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி என்னும் ஊரில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தொடர்வண்டி மூலம் காசியை சென்று அடையலாம். காசியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் காசியே முதன்மையானது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும்.

இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனிச்சிறப்பு.

இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது.


இக்கோயிலில் உள்ள கருவறையின் தங்க மேடையில் லிங்க ரூபியாக சிவபெருமான் அருள்புரிகிறார். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமானின் திருவுருவமும் இங்கு அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும்.

கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது என்பது நம்பிக்கை.

வேறென்ன சிறப்பு?

காசியில் இறந்து போனால் சொர்க்கத்தை அடைவார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம் மற்றும் ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் நம்பிக்கை.

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து இறைவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். 

கங்கா ஆரத்தி : காசியில் மற்றொரு சிறப்பம்சம் கங்கை நதியை வணங்கும் வகையில் தினந்தோறும் கங்கா ஆரத்தி எடுக்கப்படும். காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று கங்கா ஆரத்தி.

தீர்த்தக் கட்டங்கள் : கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். 

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இத்தலத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி, ஹோலிப்பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special kasi vishwanathar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->