நாளை சனிக்கிழமை... சனி பகவானை விரதமிருந்து வழிபடுங்கள்...! - Seithipunal
Seithipunal


சனி பகவானை வழிபடும் முறை:

நவகிரகங்களில் எந்தவொரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனி பகவானுக்கு உண்டு. சனி பகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும். ஒரு லக்னத்திலிருந்து இன்னொரு லக்னத்திற்கு செல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே.

சனி பகவான் என்பவர் மகேசன், சூரியபுத்திரன், நொண்டி, முடவன், ஜடாதரா, ஆயுள்காரகன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் சூரியனின் மகன் ஆவார்.

சனி பகவானை போல நல்லது செய்பவர் யாரும் இல்லை, இருப்பினும் பலரும் சனி பகவானை கண்டு அச்சம் கொள்கின்றனர். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் உள்ளார்.

பொதுவாக சனிக்கிழமை என்றாலே அது சனி பகவானுக்கு உகந்த நாள். சனி பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் சனிக்கிழமை விரதம் ஆகும்.

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, நாம் இந்த தொகுப்பில் சனி பகவானை எவ்வாறு வழிபட வேண்டும் என்றும், சனி பகவானின் விரதமுறையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க...

சனி பகவானை வழிபடும் முறை :

சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.

சனி பகவான் சற்று வலிமை வாய்ந்தவர் என்பதால் அவரை நேரெதிரே நின்று வணங்கக்கூடாது. சற்று சாய்வாய் நின்று தான் வணங்க வேண்டும்.

சனி பகவானை 'சாய்வாய் நின்று வழிபடு" என்று ஒரு பழமொழியும் உள்ளது. நல்லது நினைப்பவர்களுக்கு சனீஸ்வரர் எப்போதும் தீமைகள் செய்யமாட்டார், தீங்கு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் விடமாட்டார்.

விரதம் இருக்கும் முறைகள் :

சனிக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

சனி பகவானின் அம்சம் கொண்ட திருப்பதி வெங்கடாசலபதியின் சிறிய அளவிலான படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்பவர்களும் நீல நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, அன்றைய நாள் முழுவதும் சனி பகவானுக்குரிய மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை துதித்து சனி பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும்.

அதேபோன்று அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு சனிக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorrow saturday sanibahavan special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->