இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் நேரம் இந்தியாவில் தெரியுமா?
tommorrow surya kiraganam
நாளை சூரிய கிரகணம்:
2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி (நாளை) நிகழவுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவோ, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் சனி அமாவாசையான நாளை நடைபெறுகிறது. அதிசார சனிப்பெயர்ச்சி முடிந்த பிறகு நிகழப்போகும் இந்திய சூரிய கிரகணம் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியாவில் தெரியுமா?
சுபகிருது வருடம் சித்திரை மாதம் 17ஆம் தேதியான சனிக்கிழமை பின்னிரவான அமாவாசை திதியில் பரணி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நடைபெற இருக்கின்றது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12.15 மணிக்கு துவங்கி அதிகாலை 4.07 மணி வரை நீடிக்கும். நள்ளிரவில் இந்த கிரகணம் நடப்பதால், இந்தியாவில் பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் எங்கெங்கு தெரியும்?
அட்லாண்டிக்
அண்டார்டிகா
தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும்
பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம்.
சூரிய கிரகணம் :
அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ராகு மறைக்கும்போது ராகு கிரகஸ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது கிரகஸ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களை தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
குறிப்பாக கிரகண நாளில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கதிர்வீச்சுக்களால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவேதான் கர்ப்பிணிகளை வெளியே விடமாட்டார்கள். கிரகண கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சூரிய கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
கிரகணம் முடிந்த பிறகு வீட்டை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
English Summary
tommorrow surya kiraganam