1500 கோடி ரூபாயை எட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கை.?! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக வருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதன் மூலம் உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,

"திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  நேற்று 80,815 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது 31,562 பேர் முடி காணிக்கை செலுத்தினர். இதன் மூலம் ரூ.4.82 கோடி உண்டியல் வசூலாகி உள்ளது. கடந்த 5 மாதங்களாக மாதம்தோறும் ரூ.100 கோடிக்கும் மேல் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 

இந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடியும் ஏப்ரல் மாதம் ரூ.127.5 கோடியும், மே மாதம் ரூ.129.93 கோடியும், ஜூன் மாதம் ரூ.120 கோடியும், ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடியும் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு முடிவுக்குள் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.1500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trupathi ezhumalaiyan temple year turn over


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->