வாகனங்களின் முன்பு எலுமிச்சை கட்டப்படுவது ஏன்? - Seithipunal
Seithipunal


வாகனங்களில் எலுமிச்சை மற்றும் மிளகாய் போன்றவை கட்டப்படுவதை பார்த்து உள்ளோம். அது ஏன் என்பது பலருக்கும் தெரியாது. உண்மையில் வண்டிகளில் எலுமிச்சை கட்டுவதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் உண்டு. அவற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஆன்மிகம் ரீதியாக...!!

எலுமிச்சை பழத்தை சாஸ்திரங்கள் 'தேவ கனி" என்று விவரிக்கிறது. அதனால், தான் தாந்திரீக சாஸ்திரத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மகா சக்தியான ஆதி சக்திக்கு எலுமிச்சை மாலை கூட போடப்படுகிறது. தீய சக்திகளை துரத்தும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு என்பது நம்பிக்கை.

எலுமிச்சை ஈசனின் வடிவம் என்றால், அதில் உள்ள மஞ்சள் சக்தியின் வடிவம். மொத்தத்தில் எலுமிச்சையில் சிவ-சக்தி சங்கமிப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் பயணம் மேற்கொண்டாலோ, தீய சக்திகளை அகற்ற உடன் எலுமிச்சையை எடுத்துச் செல்வது நல்லது.

அறிவியல் ரீதியாக...!!

மிளகாயை நம் மரபில் கண் திருஷ்டிக்கு மட்டுமின்றி இன்னும் பல இடங்களில் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.

உதாரணமாக யாராவது நோய்வாய் பட்டிருந்தால் அவர்களின் படுக்கைக்கு கீழே ஐந்து மிளகாய்களை எரித்து அந்த துகள்களை வெள்ளை துணியில் கட்டி வைப்பத்தை பார்க்கிறோம். இதன் மூலம் உடல் நலம் குன்றியவர் எழுந்து வருவார் என்பது நம்பிக்கை.

மற்றொரு ஆச்சரியமான பழக்கம் வாகனங்களின் முன் எலுமிச்சை மற்றும் வரமிளகாய் கட்டுவது.

அந்த காலத்தில் வாகனங்கள் செல்கிற பகுதி கரடு முரடானதாகவும், அழுக்காகவும், அபாயம் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். மேலும் பலவித விஷப்பூச்சிகளும் இருந்திருக்கும்.

இப்படியான சூழலில் வாகனத்தில் செல்பவரை ஏதேனும் பூச்சி அல்லது பாம்பு தாக்கினால் மனிதனின் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு நாவிலுள்ள நரம்புகள் வேலை செய்யாது. அச்சமயத்தில் உண்ணும் உணவின் சுவையை உணர முடியாது.

அப்போது இந்த எலுமிச்சை மற்றும் மிளகாயின் புளிப்பும், காரமும் அவர் உணர்கிறாரா என்பதை பொருத்துதான் அவரின் சிகிச்சை அமைந்திருக்கும்.

எனவேதான் அப்போதைய காலத்திலிருந்தே வாகனங்களில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டப்படுகின்றது.

தற்போதைய காலத்தில் ஏன் வாகனத்தின் முன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டப்படுகிறது?

எலுமிச்சை பழத்தில் உள்ள 'சிட்ரிக் அமிலம்" என்னும் அமிலமானது, மிளகாயில் உள்ள காரத்துடன் இரசாயன மாற்றத்தால் 'மிதீரியட்" எனும் உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயு வாகனத்தின் உட்பகுதி வரை கடத்தப்படுகிறது. அந்த வாயுவானது ஓட்டுநரை உற்சாகத்துடன் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும், இந்த வாயுவானது இரசாயன மாற்றத்தால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால் தான் வாராவாரம் வாகனங்களில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாக எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaganangalin mun elumichai milakay kattpaduvadhu yen


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->