திருப்பதியில் வாகனங்கள் செல்ல தடை!....தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும்  4-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்கும் நிலையில், 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 

விழாவில் 8-ந் தேதி கருட சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 

ஆலோசனையின் படி, கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுவதாகவும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருட சேவையையொட்டி 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும்  இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று இரவு கருட சேவை நடைபெற்ற நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18 மணி நேரம் காத்திருந்து  78,690 பேர் சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vehicular traffic is prohibited in Tirupati Devasthanam action announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->