வீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா?! விருட்ச சாஸ்திரம் கூறுவது என்ன.?!
Veppa maram may grow In Front of Home
வேப்ப மரத்தை தெய்வீக மரமாகவே இந்திய மக்கள் போற்றி வழிபடுகின்றனர். மருத்துவ குணங்களை தன்னுள் அதிகமாக தக்க வைத்து கொண்டிருக்கும் வேப்ப மரம் தனித்துவம் மிக்க ஒரு மரமாகதான் இருக்கிறது. வேப்பம் நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. முருங்கை, வாழை, தென்னை என்று அனைத்து மரங்களும் மருத்துவ குணம் கொண்டைவைதான்.
ஆனால் அதில் இருந்து வேப்பம் சற்றே வேறுபட்டவை. ஏனெனில் வேப்ப மரத்தில் இருக்கும் பட்டை, பூ, காய், பழம், இலை, கொளுந்து, வேர் என்று ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் அடங்கி இருக்கிறது.
வேப்ப மரம் பல்வேறு மருத்துவ தன்மைகள் கொண்டது.
இதன் சாறு சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
இதன் குச்சிகள் பல் துலக்கும் பிரஷ் போல் பயன்படுகிறது.
வேப்பெண்ணெய் பிசியோதெரபி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
வேப்ப இலை கசப்பு தன்மை உடையது.
வேப்ப இலை, பிஞ்சு மாங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு கலவை தயார் செய்து யுகாதி பண்டிகை அல்லது வருட பிறப்பு அன்று தென்னிந்தியாவில் உட்கொள்கின்றனர். அதாவது ஒருவர் வாழ்வில், இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு போன்ற தன்மைகள் கொண்ட அனுபவங்கள் மாறி மாறி வரும் என்பதன் குறியீடாக இது பின்பற்றப்பட்டு வருகிறது.
வேம்பு என்று அழைக்கப்படும் இந்த ஆசாதிராட்சா இன்டிகா, இந்தியன் லிலாக், நிம்ட்ரீ என்றும் அழைக்கப்படுகிறது. வேப்ப மரம் மகோகனி குடும்பத்தை சேர்ந்ததாகும்.
இதன் தாய்நாடு இந்திய துணைக்கண்டம் ஆகும். இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள் போன்ற இடங்களில் வேப்ப மரம் பரவலாக காணப்படுகிறது.
வீட்டின் முன் வாசல் பகுதியில் ஏன் வேப்ப மரத்தை வளர்க்க வேண்டும்?
வேப்ப மரத்தை நமது முன்னோர்கள் வீட்டின் முன் வாசல் பகுதியில் வளர்த்து வந்தனர். இதற்கு காரணம் வீட்டை நோக்கி காற்று மூலமாக வரும் கிருமிகளும், தீய ஆற்றல்களும் உள்ளே நுழைவதை தடுக்கும் சக்தி வேப்ப மரத்திற்கு உண்டு. இதனால்தான் வீட்டு முன் வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்த்து வந்தனர்.
வேப்ப மரத்தில் இருந்து வெளிவரும் காற்றை நாம் சுவாசிக்கும்போது நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. நுரையீரல் சுத்தம் அடைகிறது. காலையில் எழுந்து வேப்ப மரத்தின் பசுமையை கண் குளிர பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் கண்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். கண் பிரச்சனைகள் குறையும்.
எங்கு வளர்க்கலாம்?
வேப்ப மரத்தை வீட்டின் முன் வாசல் பகுதியில் வளர்க்கலாம். ஆனால் சூரிய ஒளி வீட்டினை மறைக்காதவாறு வளர்க்க வேண்டும்.
எந்த திசையில் வளர்க்கலாம்?
வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வேப்ப மரத்தை வைக்கலாம்.
வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.
English Summary
Veppa maram may grow In Front of Home