இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?! - Seithipunal
Seithipunal


வெற்றிலை மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தாம்பூலம் என்றும் அழைப்பர். தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறம் மற்றும் தாம்பூல மத்திய பாகம் இவை இரண்டும் சிவபெருமனை குறிக்கும்.

வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனை குறிக்கும். தாம்பூலத்தின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை. 

ஸ்ரீமந் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும்.

உவர் மண்ணானது நம் ஆடையினை எவ்வாறு தூய்மைப்படுத்துகிறதோ, அதேபோன்று இந்த திருநாமமும் தான் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் என்பது ஐதீகம்.

பெருமாள் நாமம் ஒரு வீட்டில் இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் திருப்பதி ஏழுமலையான் இருப்பதாக முன்னோர்களின் நம்பிக்கை.

நாம் தினந்தோறும் பெருமாள் நாமத்தை நம் மனதார ஜெபித்து வந்தால் திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் கிடைத்து நம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழலாம் என்பது வாக்கு.

பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. 

வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கு சுபநிகழ்ச்சியின்போது வெற்றிலையும் பாக்கும் கொடுத்தால் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.

வெற்றிலையை வாட விடக்கூடாது. அப்படி வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால் தான் வாங்கவேண்டும். 

மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அபூர்வம் நிறைந்த வெற்றிலை பாக்கை இறைவனுக்கு வைத்து படைக்கும் போது நமது பிரார்த்தனை முழுமையாக இறைவனை சென்றடையும் என்பது ஐதீகம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VETRILAI PAKKU WHY PUT GOD


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->