தங்களின் குலதெய்வத்தை பார்க்க பத்து கிலோமீட்டர் நடந்து சென்ற கிராம மக்கள்! - Seithipunal
Seithipunal


குலதெய்வ வழிபாட்டுக்காக சிவகங்கை அருகே 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ. நடந்து சென்றனர். இந்த நிகழ்வு பார்ப்பவர்கள் மட்டும் கேட்பவர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது

சிவகங்கை மாவட்டம் பெருமாள்பட்டி, இலுப்பக்குடி கிராமங்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 60க்கும் மேற்பட்ட நபர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நரியனேந்தலில் உள்ள முத்தையா கோயிலில் வழிபாடு செய்கின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் ஊரடங்கு காரணத்தால் 5 ஆண்டுகள் கழித்து அங்காளி பங்காளி என ஒற்றுமையுடன் நேற்று சாமி கும்பிட சென்றனர்.

125 கிடாக்களுடன் 10 கி.மீ. தூரத்தில் உள்ள குலதெய்வ தரிசனத்திற்காக குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நடந்தே சென்றனர். உடன் வழிப்பாட்டுக்கான பொருட்களுடன் மாலை பூ பழம் என அனைத்தையும் சுமந்தபடி ஒரு பெரிய சரக்கு வண்டியும் சென்றது. நேற்று இரவு கோவிலை அடைந்துள்ளனர். இன்று (ஜூன் 9 ) சாமிக்கு அபிஷேகம் பூஜைகளை செய்து ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தியுடன் மொட்டை போடுகின்றனர்.

முதல் நாளான இன்று கோழியை படையல் இட்டு வழிபடுகின்றனர். நாளை ஜூன் 10, 11 தேதிகளில் எடுத்துச் சென்ற கிடாக்களை வெட்டி படையலிட்டு படைத்து அன்னதானம் செய்து சாமியை வழிபட இருக்கின்றனர். கடைசி நாள் வாகனம் வழியாக வீடு திரும்ப உள்ளனர்.

இது குறித்து ராமசாமி தெறிவித்ததாவது: அந்த காலத்தில் பூஜைக்கு தேவைப்படும் அனைத்தையும் ஏற்றி வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தினோம். இன்று வாகனங்களை பயன்படுத்துகிறோம். கரோனா ஊரடங்கால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாமி கும்பிடுகிறோம்.

அனைத்து பூஜை மற்றும் படையலை முடித்துவிட்டு மூன்று நாள் இங்கேயே சொந்த பந்தத்துடன் தங்கி விட்டு மூன்றாவது நாள் இங்கு இருந்து வாகனத்தில் வீடு திரும்ப இருக்கிறோம் என்று அவர் கூறினார். மேலும் ஐந்து ஆண்டுகள் கழித்து ஒற்றுமையுடன் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கு வந்து செல்வது மன மகிழ்ச்சியும் நிறைவையும் தருவதாக அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villagers walked ten kilometers for kuladheiva Dharisam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->