செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரை தோற்கடித்த 16 வயது தமிழக சிறுவன்.! - Seithipunal
Seithipunal


உலக அளவில் நடைபெற்றுவரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் ஒன் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்யானந்தா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார்.

ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, இரண்டு போட்டிகள் டிரா மற்றும் மற்ற போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இதில், ஆட்டத்தின் 39வது நகர்வின் போது மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். உலகின் நம்பர் ஒன் வீரரை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் தோற்கடித்து இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் மொத்தம் 16 சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று புள்ளிகளும், டிரா செய்வோருக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் சுற்று முடிவடைவதற்கு இன்னும் ஏழு ஆட்டங்கள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 years old boy beat no 1world chess championship


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->