அய்யோ... மீண்டும் மீண்டுமா? கான் vs தோனி! வன்மமா? ஆதங்கமா? - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்திய அணி, காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டி டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெயவர்தனேவின் அதிரடி சதத்தாலும், கேப்டன் சங்கக்காராவின் நிதானமான ஆட்டத்தினாலும் இலங்கை அணி 274 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து  275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் சச்சின் 18 ரன்னுக்கும், விராட் கோலி 38 ரன்னுக்கும், சேவாக் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

பொறுப்பை தன் தலையில் ஏற்றி நிதானமாக ஆடிய கவுதம் கம்பீரும், கேப்டன் தோனியும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

காம்பீர் 97 ரங்களுக்கு ஆட்டமிழக்க, தொடர் முழுவதும் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய தோனி இந்த  இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல வழி வகுத்தார்.

அதிலும், அவர் அடித்த கடைசி சிக்சர் தான் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை வெல்ல, இறுதி ஆட்டத்தின் நாயகனாக எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்ட நாயகனாக எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டது முதல் இன்றுவரை கவுதம் கம்பீர் ஏதாவது ஒரு விதத்தில் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

2011 உலக கோப்பை என்று சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட ஆட்ட நாயகன் விருது பற்றியும், தோனியின் அந்த கடைசி சிக்சர் பற்றியும் விமர்சிக்க தொடக்கி விடுகிறார் கவுதம் கம்பீர்.

இந்நிலையில், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் எடுத்த தம்மையும் 91 ரன்கள் எடுத்த தோனியையும் விட, பந்து வீச்சில் அசத்திய ஜாகீர் கானுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த பேட்டியில், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனிக்கு தான் ஆட்டநாயகன் விருது கிடைத்தது. ஆனால் ஜாகீர் கான் தான் அப்போட்டியின் உண்மையான நாயகன் என்று நான் கருதுகிறேன். 

ஒருவேளை ஜாகீர் கான் சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால், இலங்கை 350 ரன்கள் அடித்திருக்கும். அப்படி ஒரு சிறப்பான பந்துவீச்சை பற்றி யாரும் பேசுவதில்லை. ஜாகீர் தான் இறுதிப்போட்டியின் நாயகன்.

மாறாக என்னுடைய இன்னிங்ஸ் மற்றும் தோனியின் சிக்ஸர் பற்றி மட்டுமே அனைவரும் பேசுகின்றனர்'' என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீரின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், கம்பீர் சொல்வது போல ஜாகீர் கான் மட்டுமல்ல யுவராஜ் சிங் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை வீழ்த்தி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். 

இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால், அணியில் 11 பேருக்கும் ஆட்ட நாயகன் விருது கொடுக்க பல காரணங்களை கூறி கொண்டே போகலாம். ஆனால், ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். அது தோனியாக இருந்துவிட்டு போகட்டும். 

காலத்துக்கும் கம்பீர் இது பற்றி பேசி பேசி எந்த பயனும் இல்லை. மாறாக நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஒரு தொடக்கத்தை கொடுத்து ஆடி வருகிறது. கோப்பையை வெல்லும் வகையில் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் செயலில் கம்பீர் ஈடுபடலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2011 World Cup Gautam Gambhir Zakir Khan Mahendra Singh Dhoni 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->