2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை எப்போது ரிலீஸ்.. ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  அந்த வகையில் இந்த உலகக்கோப்பை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்  நடைபெற உள்ளது.

அந்த வகையில் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 48 லீக் போட்டிகளும், 3 நாக்அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 51 போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதில், 2023 உலக கோப்பை தொடருக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 

மேலும், மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதி சுற்றில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இதில் 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். 

சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது எதிர் பிரிவில் இருந்து முன்னேறிய 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். சூப்பர் 6 போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மேலும், இந்த 2 அணிகளும் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள 13வது உலக்கோப்பைக்கான அட்டவணை வரும் 27ஆம் தேதி காலை 11.30 மணியளவில் வெளியிடப்படும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 ICC world Cup shedule release on June 27


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->