45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : 7-வது சுற்றிலும் இந்தியா அசத்தல் வெற்றி! - Seithipunal
Seithipunal


ஹங்கேரிய நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில், ஓபன் பிரிவு முதல் சுற்றில் இந்தியா 4-0 என்ற கணக்கில் ஹங்கேரியை முற்றிலுமாக வீழ்த்தியது. அந்த வகையில் ஆா்.பிரக்ஞானந்தா – திஸ்ஸிா் முகமதையும் (1-0), விதித் குஜராத்தி – ஆகிா் மெஹதி பியரெவையும் (1-0), அா்ஜுன் எரிகைசி – எல்பிலியா ஜேக்ஸையும் (1-0),  பி.ஹரிகிருஷ்ணா – மோயத் அனாஸையும் (1-0) வீழ்த்தினா்.

இதே போல் நேற்று நடைபெற்ற  7-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில், இந்திய வீரர் குகேஷ், சீன வீரர் யி வெய்-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார். 

பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிராவை சந்தித்தனர். முடிவில் இந்தியா 2.5 - 1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி 7-வது வெற்றியுடன் தற்போது முதலிடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

45th Chess Olympiad India won the 7th round


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->