ஏ.ஆர்.ரகுமானாக வாழ ஆசைப்படும் கிரிக்கெட் வீரர்!...அவர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஒரு வாரத்திற்கு ஏ.ஆர்.ரகுமானாக வாழ ஆசைப்படுகிறேன் என்றும்,  நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்  அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டார். அப்போது வேறு ஒரு நட்சத்திரமாக  ஒரு வாரத்திற்கு வாழ வேண்டுமென்றால், நீங்கள் யாராக வாழ விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்களின் நன்மதிப்பைக் குறிப்பிட்டு  நெகிழ்ச்சி! | Dinesh Karthik Officially Announces Retirement - hindutamil.in

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், ஒரு வாரத்திற்கு என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானாக வாழ ஆசைப்படுகிறேன் என்றும், நான் அவரின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்தார்.

மேலும் ஒருமுறை கூட  இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை என்று கூறிய அவர், எவ்வாறு புதுமைக ளை உருவாக்குகிறார் என்பதை அறிய வேண்டும் என்று கூறினார்.

மேலும்  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறந்த இசையை  ஏ.ஆர்.ரகுமான் அளித்து வருகிறார். இதனால் அவரின் மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றும், அவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியாற்றுவார் என்று கேள்விப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அது தனக்கு சவாலாக இருக்கும் என்றும், இருந்தபோதிலும் அவர் நினைவுகளுக்குள் செல்ல வேண்டும் என்பதால் கவலையில்லை" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A cricketer who aspires to live as AR Rahman Do you know who he is


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->