உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து?! அதிர்ச்சியளிக்கிறதா ஆப்கனிஸ்தான்?!
Afghanistan will give shocking defeat to currant champion England
இன்று நடைபெறும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து நடப்புச் சாம்பியன் என்பதாலும், ஆப்கானிஸ்தான் குறைந்த பலம் கொண்ட அணி என்பதால் ஒரு தரப்பான ஆட்டமாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இந்த போட்டியானது அதிக முக்கியத்துவம் பெறாமல் இருந்தது.
ஆனால் ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி வருவதால், இந்த போட்டி தொடரில் அதிர்ச்சியளிக்கும் ஆட்டமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் குவித்தது.
பின்னர் 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு, இந்த இலக்கு குறைவாகவே தெரிந்திருக்கும். மேலும் மிகச் சிறிய மைதானம் என்பதாலும் அதிக அளவிலான அதிரடி பேட்ஸ்மேன்களை வைத்திருப்பதாலும் அந்த அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தான் அணியினர் பந்து வீச்சில் மிரட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் வரிசையாக வருவதும் செல்வதும் என சென்று கொண்டிருக்கிறார்கள். 21 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 120 ரன்கள் கடப்பதற்குள் ஐந்து விக்கெடுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் வெற்றிக்கு 162 ரன்கள் தேவைப்படும் நிலையில், ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே களத்தில் நிற்பதால் இங்கிலாந்தின் வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஹாரி புரூக் மட்டுமே நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த போட்டி தொடரில் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் நெதர்லாந்து இலங்கை ஆகிய அணிகள் பலம் குறைந்த அணிகளாக இருப்பதால், மற்ற ஆறு அணிகளுக்கு இடையே தான் அரையிறுதிக்கு செல்வது யார் என்று போட்டிக்கு இருக்கும் என கணிக்கப்பட்டது.
இங்கே குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள அணிகளில் ஏதேனும் ஒரு அணி, பெரிய அணிகளாக கருதப்படும் அணிக்கு அதிர்ச்சி அளித்தால் மட்டுமே இந்த போட்டி தொடர் விறுவிறுப்பாக அமையும், இல்லையென்றால் சுவாரஸ்யமே இல்லாமல் அமைந்துவிடும், போட்டிகளின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வெல்லும் நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வி அடைந்திருப்பதால், அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்குமானால் அரை இறுதி செல்வதில் சிக்கல் ஏற்படும். ஒரு அணி பிரச்சனையே இல்லாமல் அரையிறுதி செல்ல குறைந்த பட்சம் 6 போட்டிகளையாவது வென்றாக வேண்டும். இங்கிலாந்து இன்று தோல்வியடைந்தால், பெரிய அணிகளுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் விளையாடும் சூழல் உள்ளது. இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.
இன்று ஆப்கனிஸ்தான் வென்றுவிட்டால் எஞ்சி இருக்கும் போட்டிகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் களத்தில் நிற்பதால் ஓரளவு வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் கிறிஸ் வோக்ஸ், ரஷீத், மார்க் வுட் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி பேட்டிங் செய்வார்கள் என்பதால் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி, ரஷீத் கான், ரஹ்மான் சுழல் மும்முனை தாக்குதல் இங்கிலாந்து அணியை பதம் பார்த்தாலும் பார்த்துவிடும் என்றே தெரிகிறது. நடப்பு போட்டி தொடரில் இந்த போட்டியானது அதிக சுவாரசியத்தை கூட்டிய போட்டியாக இருக்கிறது. நடப்பு சாம்பியனுக்கு சோதனையான போட்டியாகவும் அமைந்துவிட்டது.
English Summary
Afghanistan will give shocking defeat to currant champion England