டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்! முக்கிய வீரருக்கு ஓய்வு கொடுத்த இந்தியா பந்துவீச்சு!  - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றியையும், ஆப்கானிஸ்தான் ஆணி முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணியுடன் தோல்வியையும் பெற்றிருக்கிறது. 

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் மோதும் லீக் போட்டி ஆனது, டெல்லி ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த ஆட்டத்தில் ஆடியே அதே அணியே ஆடும் என ஆப்கானிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த ஆட்டத்தில் ஆடிய அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஷமி சேர்க்கப்படுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபஸல்ஹாக்.

இந்தியா: ரோஹித் சர்மா , இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Afghanistan won the toss and elected bat against India in world cup league


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->